
ஆயர் தாவார், பிப்ரவரி-25 – ஜனவரி 6-ஆம் தேதி திடீர் தீ விபத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, ம.இ.கா தேசிய உதவித் தலைவரும் பேராக் மாநில ம.இ.கா தொடர்புக் குழு தலைவருமான தான் ஸ்ரீ எம்.இராமசமி 20,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை தனது செயலவை உறுப்பினர்களுடன் நேரில் சென்று கண்டு ஆறுதல் தெரிவித்து, 20,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையை அவர் எடுத்து வழங்கினார்.
இத்தொகை பள்ளிக்கூடத்தின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து பள்ளிக்கூடம் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக இருக்கும்.
இதன் மூலம் கட்டட புதுப்பிப்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்பி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தடங்கள் இன்றி தொடரும் என அவர் நபிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், தான் ஸ்ரீ ராமசாமி ஆயர் தாவார் வட்டார மக்களுடன் ஒரு சந்திப்பு நடத்தி கருத்துகளையும் பகிர்ந்துக் கொண்டார்.
மக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய தன்னால் முடிந்த உதவிகளை செய்யவும் அவர் உறுதியளித்தார்.