
போர்டிக்சன், பிப்ரவரி-14 – போர்டிக்சனில் உள்ள துவாங்கு ஜாஃபார் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ, பயனர்களுக்கான மின்சார விநியோகத்தைப் பாதிக்கவில்லை என TNB தெரிவித்துள்ளது.
தீ ஏற்பட்ட கையோடு, தொழில்நுட்ப குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உரிய கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போதைக்கு தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.
நிலவரம் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போது தகவல்கள் வழங்கப்படும் என்றும் TNB கூறியது.
முன்னதாக, பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீ ஏற்பட்டதால், சுற்று வட்டார மக்கள் பீதியடைந்தனர்.
உடனடியாக போர்டிக்சன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழுக்கள் சம்பவ இடம் விரைந்தன.
யாரும் அதில் காயமடைந்ததாக இதுவரை தகவலில்லை.