
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – : Muafakat Nasional கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள், கூட்டணி அரசின் நிலைத்தன்மையை பாதிக்காது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2019-ல் PAS–அம்னோ இணைந்து உருவாக்கிய Muafakat Nasional குறித்து, இது சம்பந்தப்பட்ட கட்சிகளின் உள்நிலை விவகாரம் மட்டுமே என்றும், தற்போது கூட்டணி அரசு உறுதியாக இருந்து பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
16 வது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என PAS தேர்தல் இயக்குநர் Sanusi Md Nor உள்ளிட்ட சில PAS தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், PAS–Bersatu இடையிலான பிரச்சினைகள் அரசின் விஷயம் அல்ல என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சிகளுக்குள் நடைபெறும் பிளவுகள் கூட்டணி அரசின் செயல்பாட்டை பாதிக்காது என்று கூறி அவர் மக்களை தெளிவுபடுத்தினார்.



