
செப்பாங், ஆகஸ்ட்-25 – போலி சிறப்பு அட்டையைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஓர் இந்தியப் பிரஜையான 45 வயது மாது, KLIA 1 விமான முனையத்தில் கைதுச் செய்யப்பட்டார்.
பரிசோதனையில் குட்டு அம்பலமானதை அடுத்து அவர் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாக, AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக KLIA குடிநுழைவுத் தடுப்பு முகாமில் விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
நாட்டின் நுழைவால்களில் இது போன்ற போலி ஆவணங்களின் பயன்பாட்டை வேரறுப்போம் என AKPS கூறிற்று.