
பத்து பஹாட், செப்டம்பர் 8 – முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டு திட்டத்தில் சிக்கிய 55 வயது பெண் ஒருவர், மொத்தம் 571,242 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த ஆண்டு அதிக லாபம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தெரியாத நபருடன் தொடர்பு கொண்ட அம்மாது அரை மில்லியனுக்கும் மேலாக பண பரிவர்த்தனைச் செய்துள்ளார்.
முதலீட்டு கணக்கில் 804,000 ரிங்கிட் லாபம் காட்டப்பட்ட நிலையில் அப்பெண் அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, அவரின் கணக்கு முடக்கப்பட்டதை அறிந்து போலீசில் புகைரளித்தார்.
இச்சம்பவம் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்று அறியப்படுகின்றது.
அதிக லாபத்தை உறுதியளிக்கும் முதலீட்டு சலுகைகளில் எளிதில் ஏமாற வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.