Latestமலேசியா

போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிநாட்டு ஆடவரை மிரட்டிய ஆடவனுக்கு ரி.ம 6,000 அபராதம்

மலாக்கா , பிப் 6 – வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை மிரட்டும் நோக்கத்துடன் கடந்த வாரம் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆடவனுக்கு இன்று ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 6,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

பாதுகாவலரான 51 வயதான ஷாரில் இஸ்மாயில் என்ற அந்த நபர் பிப்ரவரி 1 ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் மலாக்கா, ஜாலான் பெண்டஹாராவில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான் .

மோட்டார் சைக்கிளில் சென்ற ஷாரில் , சைக்கிளில் சென்று கொண்டிருந்த வங்காளதேச ஆடவரை நிறுத்தி தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பணத்தை பறித்துள்ளான் .

எனினும் அந்த பாதுகாவலரின் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து ஷாரில் கைது செய்யப்பட்டான்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டது , அவனது முறையீடு மற்றும் கருணை மனுவை பரிசீலித்தப் பின்னர் அந்த நபருக்கு மாஜிஸ்திரேட் ஷர்டா சின்ஹா சுலைமான் (Sharda Shienha Mohd Suleiman ) அபராதம் விதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!