Latestமலேசியா

போலீஸ் ரோந்துக் காரில் மோட்டார்சைக்கிள் மோதியது; இளைஞர் காயம்

கோலாலம்பூர், டிச 20 – கிளந்தான் , Jalan Jeli-Dabong 10 ஆவது கிலோமீட்டரில் 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், போலீஸ் ரோந்துக் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவன் கடுமையாக காயமடைந்தான்.

இரவு மணி 9.20 அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் திடீரென சாலையை கடந்த நாயை மோதுவதை தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஜெலி போலீஸ் தலைவர் சாரி யாக்கோப்( Saari Yaacob ) தெரிவித்தார்.

Kuala Balah விலிருந்து ஜெலியை நோக்கி போலீஸ் ரோந்து காரான Honda Civic சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அந்த காரின் வலதுபுறத்தில் மோதியது. இதனால் மோட்டர் சைக்கிள் ஓட்டிய நபர் முகத்தில் காயம் அடைந்ததோடு வலது கை முறிவுக்கு உள்ளாதைத் தொடர்ந்து தானா மேரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் 43ஆவது விதி ( உட்பிரிவு (1)இன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!