
நீலாய், ஆக 28 – பல்வேறு குற்றச் செயல்கள் உட்பட போலீசாரால்
தேடப்பட்டு வந்த இரண்டு இளைஞர்களை நீலாயிலிருந்து சிலாங்கூரின் காஜாங்வரை போலீசார் துரத்திச் சென்றனர்.
அதற்கு முன்னதாக இரு சந்தேகப் பேர்வழி சென்ற ஹோன்டா சிட்டி கார் பரிசோதனைக்காக நெருங்கிய போலீசாரின் MPV வாகனத்தை மோதியபின் அங்கிருந்து தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அக்காரை போலீஸ் வாகனம் துரத்திச் சென்றதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Abdul Malik தெரிவித்தார்.
சாலையின் பல்வேறு பகுதிகளில் அந்த சந்தேகப் பேர்வழிகளை சில போலீஸ் ரோந்து வாகனங்களின் ஒத்துழைப்போடு போலீசார் துரத்திச் சென்றனர்.
எனினும் சந்தேகப் பேர்வழியின் கார் காஜாங் Rincing Hulu 2 இல் கவிழ்ந்ததில் 20 வயது மதிக்கக்தக்க உள்நாட்டை சேர்ந்த ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
தப்பியோடிய மற்றொரு நபர் 15 குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவன் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்மாதம் 31 ஆம்தேதிவரை அவன் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.