
ஜோர்ஜ் டவுன், மார்ச் 7 – ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பௌத்த விகாரத்திற்கு கடந்த வாரம் தீ வைத்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை வேலையில்லாத ஆடவர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிபதி இர்வான் சுஹைய்போன் (Irwan Suainbon) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 50 வயதான சாய் பீ சியோங் ( Chye Bee Seong ) ஒப்புக்கொண்டார்.
தடயியல் அதிகாரிகளின் அறிக்கை கிடைத்தபின்னர் மே 13ஆம் தேதி Chyeக்கு தண்டனை விதிக்கப்படும்.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 435 ஆவது விதியின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.