
வாஷிங்டன், ஜனவரி-9,
உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், தனது மகன் ஸ்ட்ரைடர் சேகர் (Strider Sekhar) உடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மாஸ்க்கின் SpaceX தொழில்நுட்ப மையத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
“சேகர்” என்ற பெயர், நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் நிபுணர் சுப்ரமணியன் சந்திரசேகரை நினைவுகூரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் தாயான ஷிவோன் சிலிஸ் (Shivon Zilis), பஞ்சாபி வேர்க் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் இந்த செய்தியை மேலும் கவனிக்கச் செய்துள்ளது.
மாஸ்க் பகிர்ந்த இப்பதிவு, ஆயிரக்கணக்கான likes-கள் மற்றும் பகிர்வுகளைப் பெற்றுள்ளது.
அறிவியல், குடும்ப பாசம், கலாசார இணைப்பு ஆகிய மூன்றையும் இணைக்கும் இந்த தருணம், இலோன் மாஸ்க் குடும்பத்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.



