Latestமலேசியா

மகாதீர் மீது குற்றவியல் விசாரணையை நடத்த பத்து பூத்தே அரச விசாரணைக் குழு பரிந்துரை

கோலாலம்பூர், டிச 5 – முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகமட்  ஏமாற்றியது 

தொடர்பாக அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணையை  (  RCI )  எனப்படும் பத்து பூத்தே  அரச விசாரணைக் குழு   பரிந்துரை செய்துள்ளது.  

X  சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட  வகைப்படுத்தப்பட்ட அறிக்கையின் நகல் இன்று நாடாளுமன்றத்தில்  எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது என்று   பொதுப் பணித்துறை துணையமைச்சர்  அகமட் மஸ்லான் தெரிவித்தார். 

  குற்றவியல் விசாரணைக்கு வழி வகுக்கும் வகையில் மகாதீருக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்ய ஆணைக்குழுவின் செயலாளருக்கு பரிந்துரை செய்ததாக  அரச விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியது. 

குற்றவியல் சட்டத்தின்  415 (b) விதியின்   கீழ்   ஏமாற்றியது தொடர்பான விசாரணை தொடங்கப்படலாம் என்பதோடு ,  417 ஆவது விதி மற்றும்   418 ஆவது விதியின்  கீழ் தண்டிக்கப்படலாம் என அந்த அறிக்கையில்   கூறப்பட்டுள்ளது.  

 அரச விசாரணைக் குழுவின் தலைவர்  Raus Sharif   விசாரணை குழுவின் இறுதி அறிக்கையை ஆகஸ்டு  12 ஆம் தேதி  இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம்   சமர்ப்பித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!