Latestமலேசியா

மனிதவள அமைச்சரானார் ரமணன், யுனேஸ்வரனுக்கு துணையமைச்சர் பதவி, சரஸ்வதி கந்தசாமி நீக்கம்

புத்ராஜெயா, டிசம்பர் 16-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முழு அமைச்சராக பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.

தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக இருந்த அவர், தற்போது மனிதவள அமைச்சராகியுள்ளார்.

இவ்வேளையில், தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சராக இருந்த சரஸ்வதி கந்தசாமி அதிரடியாக நீக்கப்பட்டு;
அவருக்கு பதிலாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் துணையமைச்சராக. அறிவித்துள்ளார் பிரதமர்.

இவ்வேளையில், இரு முழு அமைச்சர்கள் பதவி இழந்துள்ளனர்.

அவர்கள் முறையே கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபா மற்றும் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ நாயிம் மொக்தார்.

காலியாக இருந்த 4 அமைச்சுக்களுக்கும் நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெங்கு டத்தோ சாஃப்ருல் விட்டுச் சென்ற முதலீடு, வாணிபம் மற்றும் தொழில் துறை அமைச்சான MITI தற்போது, டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானியின் வசம் சென்றுள்ளது.

அவர் இதுநாள் வரை தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சராக இருந்தார்.

டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி விட்டுச் சென்ற பொருளாதார அமைச்சுக்கு, Akmal Nasrullah bin Mohd Nasir நியமிக்கப்பட்டுள்ளார்.

இயற்கை வளம், சுற்றுச் சூழல் நிலைத் தன்மைக்கான அமைச்சராக, டத்தோ ஸ்ரீ Arthur Joseph Kurup-பும், தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சராக Steven Simமும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுநாள் வரை மனிதவள அமைச்சராக இருந்து வந்தார்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ, கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வேளை, சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் Dr Tawfiq Johari அவ்விடத்தை நிரப்புகிறார்.

துணையமைச்சராக இருந்த அம்னோ மகளிர் தலைவர் டத்தோ ஸ்ரீ நொராய்னி அஹ்மாட் மீண்டும் முழு அமைச்சராகியுள்ளார்.

அவருக்கு தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களும் துணையமைச்சர்களும் நாளை காலை 10 மணிக்கு இஸ்தானா நெகாராவில் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுகவுள்ளனர்.

பிரதமரான பிறகு டத்தோ ஶ்ரீ அன்வார் செய்துள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!