Latestமலேசியா

மக்களின் கவலை குறித்தே பேசினேன்; ஹலால் குறித்தோ JAKIM குறித்தோ கேள்வி எழுப்பவில்லை- திரேசா விளக்கம்

கோலாலம்பூர், செப்டம்பர்-10, ஹலால் சான்றிதழ் குறித்தோ, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (JAKIM) பணி குறித்தோ தாம் ஒருபோதும் கேள்வியெழுப்பியதில்லை என, செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் (Teresa Kok) தெளிவுப்படுத்தியுள்ளார்.

என்றாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல்லின மக்களின் பிரச்னைகளுக்கும் அவர்களின் கவலைகளுக்கும் குரலாக விளங்க வேண்டியது என் கடமை.

அதைத் தான், தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ள ஹலால் விஷயத்திலும் நான் செய்தேன் என, இன்று காலை புக்கிட் அமான் போலீசிடம் வாக்குமூலம் அளித்தி விட்டு திரும்பிய போது, முன்னாள் அமைச்சருமான திரேசா சொன்னார்.

தம் மீதான போலீஸ் புகார்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணையில், போலீசுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகக் கூறிய திரேசா, அனைவரும் சற்று நிதானம் காக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் பரிமாறாத அனைத்து உணவகங்களுக்கும், பானங்கள் விற்கும் கடைகளுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நாயிம் மொக்தார் முன்னதாக கூறியிருந்தார்.

அத்திட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து பேசிய திரேசா கோக், அது நடைமுறைக்கு வந்தால் சிறு வியாபாரிகளுக்கு கூடுதல் சுமையேற்படும், பயனீட்டாளர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், பன்முக கலாச்சாரத்தைப் பாதிக்கும் என தெரிவித்திருந்தார்.

இவ்வேளையில், திரேசா பேசியதில் தவறில்லை; அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்குவோமென, DAP தலைவர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!