Latestமலேசியா

மதுபான விருந்து அரசாங்கத்தின் ஏற்பாடு அல்ல, தனியார் துறையினுடையது; அமைச்சர் தியோங் விளக்கம்

 

கோலாலம்பூர், அக்டோபர்-5,

அண்மையில் நடைபெற்ற Global Travel Meet நிகழ்ச்சியில் அரசாங்கம் மதுபான விருந்தினை நடத்தியதாக வைரலானக் குற்றச்சாட்டை, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.

அவ்விருந்து சுற்றுலா துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் நிதி ஆதரவில் நடத்தப்பட்டது, அரசாங்கத்தால் அல்ல என்றார் அவர்.

கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது மற்றும் ‘2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தை அறிமுகப்படுத்தியது என்ற அளவில் மட்டுமே, அன்றிரவு Tourism Malaysia நிறுவனத்தின் பங்கு இருந்ததாக அவர் விளக்கினார்.

அவ்விருந்தில் பங்கேற்றவர்கள் மதுபானக் கிளாஸ்களுடன் இருந்த புகைப்படங்களை, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து அந்த சர்ச்சை எழுந்தது.

மது அல்லாத பானங்களும் போதுமான அளவுக்கு நிகழ்ச்சியில் பரிமாறப்பட்டதாகக் கூறிய தியோங், தவறான தகவல்கள் அனைத்துலக அரங்கில் மலேசியா மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுமென, மாஸ் எர்மியாத்தியை எச்சரித்தார்.

‘2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு’ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான துறையாக மாறும் என்பதால், உள்ளூர் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்துவதில் அனைத்து தரப்பும் கவனம் செலுத்த வேண்டுமென தியோங் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!