
மந்தின், ஜனவரி-1 – நெகிரி செம்பிலான், மந்தினில், அடுக்குமாடி வீட்டடொன்றில் 11 கத்தி குத்துக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதி வாழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதையடுத்து, அவரோடு ஒரே வீட்டில் வசித்து வந்த இரு ஆடவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.
இருவரும் ஜனவரி 6 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வரும் வேளை, கொலைக்கானக் காரணத்தை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
எனவே, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யூகங்களை எழுப்ப வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



