
செமஞே, செப்டம்பர்-16,
சிலாங்கூர், செமஞேவில் 38 வயது பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர் அப்பாதுகாவலரும், ஒரு லாரி ஓட்டுனரும், இதர நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டது.
வீடமைப்பு மைதானத்தில் தகராறு முற்றி தாக்கப்பட்டதில் லாரி ஓட்டுனர் கை விரல்களில் காயமுற்றார்.
இதையடுத்து அங்கிருந்து ஐவரும் கிளம்பி விட்டனர்.
எனினும் நடந்தவற்றில் இன்னும் திருப்தி கொள்ளாததால் அந்த லாரி ஓட்டுனரும் அவரது நண்பர்களும் மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கு பாதுகாவலரின் வீட்டுக்குக்கே சென்று தாக்கியதாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
கைகளிலும் உடம்பிலும் படுகாயமடைந்த பாதுகாவலர் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு போதைப்பொருள் உள்ளிட்ட குற்றப் பதிவுகள் உள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் கொலைக் குற்றமாக விசாரிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவல் தெரிந்தோர் காஜாங் போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.