
சாலை போக்குவரத்து துறையான JPJ, சாலை பாதுகாப்பை மேம்படுத்த Kejara புள்ளி முறை அதாவது Demerit Points System-த்தை மேம்படுத்துகிறது.
இதில் real-time நிகழ் நேர தரவு இணைப்பு, கடுமையான அமுலாக்கம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மீதான விரிவான கண்காணிப்பும் அடங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
உயிரிழப்புக்குக் காரணமான குற்றங்களும் இம்முறையில் கணக்கில் கொள்ளப்படும்; தவிர, ஓட்டுநர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிச் செய்ய Risk Management Scale முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு விரைவில் MyJPJ செயலி, MySikap தளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றம் செய்ததால் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாகச் செல்ல வேண்டியிருக்கும்.
வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கு ஒழுக்கத்தையும் பாதுகாப்பாக வாகனமோட்டும் பழக்கத்தை ஊட்டுவதுமே இதன் நோக்கம் என்றார் அவர்.
கனரக வாகனங்களுக்கு தொழில்நுட்ப பரிசோதனைகள், திடீர் சோதனைகள் மற்றும் சரக்கு வரம்பு கண்காணிப்பையும் JPJ மேற்கொள்ளும்.
அதேசமயம், APAD எனப்படும் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம், ICOP பாதுகாப்பு அமைப்பை கடுமையாக அமல்படுத்தி, விதிகளை மீறும் நிறுவனங்களின் அனுமதிகளை இடைநீக்கவோ ரத்து செய்யவோ முடியும் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.