
கோலாலம்பூர் , மார்ச் 24-DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள சாலையில் மரம் விழுந்து தங்களது 30 வயது மகன் புன் முன் லப்
(Phun Mun Lap) மரணம் அடைந்ததற்கு இழப்பீடாக அவரது பெற்றோருக்கு
824, 180 ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்ற மேயருக்கு
செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
61 வயதான கூய் லிங் சிம் ( Gooi Ling Sim) மற்றும் 63 வயதான புன் கோக் ஹோய் ( Phun Kok Hoi) ஆகியோர், கோலாலம்பூர் மேயரை பிரதிவாதியாகக் கொண்டு தாக்கல் செய்த வழக்கு மனுவை அனுமதித்த பின்னர், நீதிபதி எஃபாண்டி நஸிலா அப்துல்லா ( Effandi Nazila Abdullah ) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
Phun Mun Lap பின் இறுதிச் சடங்கு செலவுகளான 26,180, ரிங்கிட் , மகனின் வருமான இழப்பிற்காக 768,000 ரிங்கிட் மற்றும் துயரத்திற்கான இழப்பீடாக 30,000 ரிங்கிட் ஆகியவற்றை பெற்றோர் Gooi Ling Sim , Phun Kok Hoi ஆகியோருக்கு பிரதிவாதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கீழே விழுந்த மரம் DBKL-இன் பராமரிப்பில் இருந்துள்ளதோடு , அதன் நிர்வாகத்தின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட அலட்சியமே இந்த சம்பவத்திற்கு காரணம் என நீதிபதி Effandi Nazila தீர்ப்பளித்தார்.
அதோடு கீழே விழுந்த மரம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் இருந்துள்ளதால் அதற்கான பொறுப்பு தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.



