
புத்ராஜெயா, ஜனவரி-15 – “தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தத் தைத் திங்கள் முதல் நாள் – பொங்கல் பண்டிகை அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், நலம் – வளம் மற்றும் அமைதியான வாழ்வையும் தரட்டும் என, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பொங்கல், குடும்ப ஒற்றுமை, கடின உழைப்பு, பரஸ்பர மரியாதை, சமூக ஒற்றுமை போன்ற நற்பண்புகளை வலியுறுத்தும் ஒரு முக்கிய திருவிழாவாகும்.
இந்நன்னாளை, கடவுள் அருளிய வளம், தொழில் வெற்றி ஆகியவற்றுக்கு நன்றியை வெளிப்படுத்தும் பாரம்பரியமாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதுவே, இன-மத பேதங்களைத் தாண்டி சமூகங்களுக்கிடையிலான நட்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வாய்ப்பாகவும், மலேசியாவின் பன்முக சமூகத்தின் உண்மையான வலிமையையும் பிரதிபலிக்கிறது.
மலேசியா மடானி கொள்கை வலியுறுத்தும் அரவணைப்பு, நீதி மற்றும் மக்கள் நலன் போன்ற அடிப்படை பண்புகளுடன் இது ஒத்துப் போகிறது.
எனவே, இன்றைய பொங்கல் திருநாளில் மக்களின் நல்வாழ்வும் சமூக நல்லிணக்கமும் ஓங்க பிராத்திப்பதாகவும் ரமணன் கூறினார்.



