
மலாக்கா – ஆகஸ்ட் 29 – தனது சொந்த பயனீட்டுக்காக 29 மருந்து பொட்டலங்களை மாற்றி வைத்தன் மூலம் நம்பிக்கை மோசடி செய்ததாக தனியார் மருத்துவமனை கிடங்கின் மேலாளர் ஒருவர் மீது மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிபதி ஹடிரியா சீரி முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வாசித்தபோது 39 வயதுடைய சுஹாஷகரா ரம்லி ( Suhazagara Ramli ) மறுத்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி Taman Kosta Melaka விலுள்ள தனியார் மருத்துவமனையில் மொத்தம் 1,191 ரிங்கிட் மதிப்புள்ள 11 பெட்டிகளைக் கொண்ட மருந்துகளை மாற்றியதன் மூலம் இக்குற்றத்தை புரிந்ததாக ( Suhazagara Ramli ) மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 8,000 ரிங்கிட் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.