Latestமலேசியா

மறைக்கப்படும் வேலைகள், முறியடிக்கப்படும் கனவுகள்: வேலை தெரிவுநிலை சீர்திருத்தத்தைத் தொடர புத்ராஜெயாவுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர்-8 – அனைத்து வேலைவாய்ப்புகளையும் MYFutureJobs தளத்தில் வெளியிட வேண்டும் என முதலாளிமார்களைக் கட்டாயப்படுத்தும் சீர்திருத்தத்தில் உறுதியாக இருக்குமாறு, அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட காலியிடங்கள் மலேசிய இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை மோசமாக்குகின்றன; இதனால் குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக, UNI-MLC தொழிலாளர் மையம் கூறுகிறது.

15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 9.9% ஆக உயர்ந்து, 2.9 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுவே 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் வேலையின்மை 6.2%-டாக உள்ளது.

பல வேலைகள் காலியாக இருந்தாலும், அவை தனியார் தளங்கள், WhatsApp குழுக்கள் அல்லது உள்ளுக்குள்ளேயே பகிரப்படுகின்றன.

இதனால் திறமையான இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்து, குடும்பங்கள் பொருளாதார சிரமத்தில் சிக்குவதாக UNI-MLC தலைவர் டத்தோ Shafie BP Mammal சுட்டிக் காட்டினார்.

2017 தொழில் காப்பீட்டு சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தம் மூலம், அனைத்து வேலைவாய்ப்புகளும் MYFutureJobs தளத்தில் கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டும்; அதேசமயம் JobStreet அல்லது LinkedIn போன்ற தளங்களையும் முதலாளிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

வேலைவாய்ப்பு தகவல் வெளிப்படைத்தன்மையானது, ILO எனப்படும் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளின் படி தொழிலாளர் பாதுகாப்பின் அடிப்படை கொள்கையாகும்;

எனவே, சம்பந்தப்பட்ட சட்டத் திருத்ததை ஒத்தி வைக்க கோரிக்கைகள் எழுந்தாலும், அரசாங்கம் தனது சீர்திருத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டுமென Shafie BP Mammal, FMT-யிடம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!