
கெமஞ்சே, டிசம்பர்-28 – நெகிரி செம்பிலான், கெமஞ்சேவில் (Gemencheh) மற்றொருவரின் MyKad அடையாள அட்டையைத் தவறாக பயன்படுத்தி, அரசாங்கம் வழங்கும் BUDI95 எரிபொருள் மானியத்தைப் பெற்றதாகக் கூறப்படும் 42 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
MyKad உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, அவ்வட்டை கெமஞ்சேவில் உள்ள பெட்ரோன் எண்ணெய் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சந்தேக நபர் சுங்கை லெரெக், கம்போங் பாரு PPRT பகுதியில் கைதுச் செய்யப்பட்டார்.
தேசியப் பதிவிலாகாவான JPN, ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியது.
இச்சம்பவம் தேசிய பதிவு விதிகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
சந்தேக நபரை விசாரணைக்காகத் தடுத்து வைக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாருடைய MyKad அட்டையையும் எந்த நோக்கத்திற்காகவும் தவறாக பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும்…
காணாமல் போன அடையாள அட்டையைக் கண்டால் உடனடியாக JPN-னிடமோ அல்லது போலீஸிடமோ ஒப்படைக்க வேண்டும்.
தவறாக பயன்படுத்தினால் அபராதம், சிறைத் தண்டனை என கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிலாகா எச்சரித்துள்ளது.



