
கோத்தா பாரு, ஜனவரி 8 – மலர் செடிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற, 17 மற்றும் 49 வயதுடைய இரண்டு ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, Jeli-Grik நெடுஞ்சாலையில், சந்தேகமான முறையில் சென்ற லாரி ஒன்றைப் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 7,900 Bromeliad மலர் செடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த செடிகள் 156 பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன. அவை உள்ளூர் சந்தைக்காக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மலர் செடிகள் மற்றும் லாரியின் மொத்த மதிப்பு RM1.395 மில்லியன் ஆகும். இந்த வழக்கு தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கிளாந்தான் வேளாண்மைத் துறைக்கு மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.



