
மலாக்கா, அக்டோபர்-8,
மலாக்காவில் ஒரு பிக்கப் வண்டியில் இஸ்ரேலிய மொழியான இப்ரானியில் “மலேசியா எங்கள் வீடு” என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடியோ வைரலாகி, பொது மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த ஸ்டிக்கரை ஒட்டியவர் யார், அவரின் நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய மாநில போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.
சம்பவம் நடந்த இடத்தின் CCTV காட்சிகளும் டிஜிட்டல் ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இது மத மற்றும் இன உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்படும் போலீஸ் தெரிவித்தது.
விசாரணை நடைபெறுவதால், மக்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனவும் அது கேட்டுக்கொண்டது.
இது குறித்த தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.