
மலாக்கா, மார்ச் 14 – மார்ச் 9 ஆம் தேதி மலாக்கா Taman Paya Rumput Utamaவிலுள்ள நகைக்கடையில் 12,000 ரிங்கிட் மதிப்புள்ள நகையை கொள்ளையிட்ட ‘Zarul Solo’ என்ற வேலையில்லாத ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
46 வயதுடைய அந்த ஆடவன் புதன்கிழமை இரவு மணி 10.30 அளவில் ஆயர் குரோவிலுள்ள (Ayer Keroh) அடுக்கு மாடி வீட்டில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை Komisioner கிறிஸ்தபர் பாதிட் (Christopher Patit) தெரிவித்தார்.
அந்த ஆடவனிடமிருந்து திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியையும் போலீசார் மீட்டனர்.
எஞ்சிய நகையை அந்த நபர் பணத்திற்காக விற்பனை செய்துள்ளான்.
நகை வாங்கும் வாடிக்கையாளரைப் போல் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்கு சென்று மூன்று தங்க சங்கலியை பார்த்துக்கொண்டிருந்ததோடு திடீரென அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்ததாக செய்தியாளர்களிடம் கிறிஸ்தபர் பாதிட்(Christopher Patit) கூறினார்.