
மலாக்கா, ஆக 12 – மலாக்காவில் Kandangகிற்கு அருகில் ஜாலான் Lebuh AMJவில் முறிந்த மரக்கிளையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 33 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியான Muhammad Fauzy Borhan மரணம் அடைந்தார்.
அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது இளைய சகோதரர் 30 வயதான Muhammad Naim காயம் அடைந்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே Muhammad Fauzy இறந்த வேளையில் Muhammad Naim மலாக்கா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Christopher Patit தெரிவித்தார்.
அந்த இரண்டு சகோதரர்களும் தம்பினிலிருந்து மூவாருக்கு தனித்தனியே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மரம் முறிந்த கிடந்ததால் அதன் கிளைகள் சாலையை முற்றிலும் மறைத்திருந்தது.
இதனால் அவர்கள் வேறு வழியின்றி கீழே விழுந்த மரத்தில் மோதி அதன் கிளைகளுக்கு மத்தியில் விழுந்தனர்.
Yamaha மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற Muhammad Fauzy முகத்தில் கடுமையாக காயம் அடைந்ததால் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
மற்றொரு Yamaha மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற Muhammad Naim தலையில் கடுமையாக காயம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.