
கோலாலம்பூர், டிச 16 -மலாக்காவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொர்பான விசாரணை முறையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் இருக்கும் என போலீஸ் தனக்கு உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். கடந்த மாதம் மலாக்கா போலீஸ் மூன்று ஆடவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிக் சூடு சம்பவம் தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று அன்வார் மேலவையில் கூறினார். இந்த விவகாரத்தில் எந்தவொரு தவறு நடந்திருந்தால் அது சகித்துக்கொள்ளப்படாது என மேலவையில் செனட்டர் அமிர் கஷாலி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.
அதே வேளையில் , தங்கள் கடமைகளைச் செய்வதில் எல்லை மீறும் போலீஸ் துறையினருக்கும் , புறக்கணிக்கக் கூடாத குற்றவாளிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பொருத்தமான பலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால்தான் போலீஸ்காரர்கள் தங்கள் பொறுப்புகளை சட்டத்தின்படி நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அன்வார் சுட்டிக்காட்டினார்.
கூறினார். அதிகாரிகள் செய்யும் எந்தவொரு தவறான நடவடிக்கைகளையும் , நடத்தையையும் புகாரளிக்க பொதுமக்கள் சுயேச்சை போலீஸ் ஆணையம் மற்றும் அமலாக்க மேற்பார்வை அமைப்புகளை அணுகலாம் என்றும் அன்வர் கூறினார்.



