
அலோர் காஜா, அக்டோபர்-11,
மலாக்காவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், 3-ஆம் படிவ மாணவி ஒருவர் வகுப்பறையில், இரண்டு சீனியர் மாணவர்களால் கும்பலாக கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அலோர் காஜாவில் ஓர் இடைநிலைப் பள்ளியில் யாரும் வகுப்பில் இல்லாத போது நிகழ்ந்த அச்சம்பவம் வீடியோவில் பதிவுச் செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீஸில் புகார் செய்த நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைதுச் செய்யும் நடவடிக்கையில் போலீஸ் இறங்கியுள்ளது.
அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கும், மன அதிர்ச்சிக்கு ஆலோசனைப் பெறவும் அனுப்பப்பட்டுள்ளார்.
வீடியோ இணையத்தில் வைரலாகி வலைத்தளவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் கல்விச் சூழலில் பாதுகாப்பு, கண்காணிப்பு, மாணவர் நலன்கள் ஆகியவற்றின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில் பள்ளி பாதுகாப்பு நெறிமுறைகளை கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.