
மலாக்கா, ஆகஸ்ட்-16 – மலாக்கா, ஷா பண்டாரில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்காகக் காத்திருந்த 24 வயது வாலிபர், அடுக்குமாடி குடியிருப்பின் 27-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அவ்வாடவரும் அவர் மணமுடிக்கவிருந்த 21 வயது பெண்ணும் அங்குள்ள தங்கும் விடுதிக்குள் check in செய்தது, போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எட்டாவது மாடியில் வாடகைக்குத் தங்கிருந்தவர்களில் ஒருவர், ஏழாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து ஒரு பெரிய இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
சத்தம் வந்த திசையை எட்டிப் பார்த்த போது நீச்சல் குளத்தில் மனித உடல் போல் ஒரு பொருள் இருப்பதை கண்டு அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் நீச்சல் குளத்தில் இடது கை துண்டான நிலையில் ஓர் ஆடவரின் சடலம் மிதப்பதை கண்டனர்.
தீயணைப்பு-மீட்புத் துறை வரவழைக்கப்பட்டு சடலம் நீச்ச வ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு, சவப்பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவத்திற்கு முன்பாக, யாரோ அறைக் கதவைத் தட்டுவதாக வருங்கால மனைவியிடம் கூறிய அவ்விளைஞர், பால்கனிக்கிச் சென்று கீழ் மாடிக்கு இறங்க முயன்றுள்ளார்.
எனினும் துரதிஷ்டவசமாக கால் வழுக்கி ஏழாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்தது தெரிய வந்துள்ளது.
அவர் விழும் போது அங்கு வேறு யாரது நடமாட்டமும் இல்லையென்பது CCTV கேமரா பதிவின் வழி உறுதியானதால், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.