Latestமலேசியா

மலாக்காவில் 4 பெண்களிடம் கொள்ளையடித்த டெலிவரி ரைடர், குற்றத்தை மறுத்துள்ளார்

பெட்டாலிங் ஜெயா, மே 8 – இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மலாக்கா தெங்கா பகுதியில், 4 பெண்களிடம் கொள்ளையடித்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி ரைடர் ஒருவர், மலாக்கா ஆயர் கெரோ நீதிமன்றத்தில் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.

31 வயது மதிக்கத்தக்க அகமது ரீஜ்கான் ஜலிலுதீன் (Ahmad Reezqan Jaliludin),வெவ்வேறு நாட்களில், வெளிநாட்டவர் உள்ளடங்கிய 4 பெண்களிடம், சுமார் 2,500.00 ரிங்கிட்டுக்கு மேற்பட்டு கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ,அக்குற்றத்தை அவர் மறுத்துள்ள நிலையில், குற்றவாளியின் வழக்கறிஞரின் கோரிக்கைகளுக்கிணங்க, நீதிமன்றம் அந்நபருக்கு 8,000.00 ரிங்கிட் ஜாமீன் விதித்தது.

தொடர்ந்து, இவ்வழக்கு ஜூன் 17-ஆம் தேதி ஒத்திவைப்பதோடு, அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!