
அலோர் காஜா, செப்டம்பர்-9 – மலாக்கா அலோர் காஜாவில், TNB துணை மின்நிலையம் அருகே இருந்த கால்வாயில் ஒரு மியன்மார் ஆடவர் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் 2.30 மணி வாக்கில் தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறை, அங்கு அவ்வாடவர் சுயநினைவின்றி கிடப்பதை கண்டது.
மின்சார விநியோகத்தைத் துண்டித்து கால்வாயிலிருந்து அவரை மீட்ட போது, அந்நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
அவர் மீது மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளை, மேலும் விவரங்களைத் திரட்ட போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.