மலாக்கா, டிசம்பர் 19 – மலாக்கா ம.இ.கா மகளிர் பிரிவு துணைத்தலைவரான கல்பனா கிருஷ்ணன், மலாக்கா மருத்துவமனையின் மனநல மற்றும் உளவியல் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு இரண்டு கேரம் போர்டுகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, கேரம் விளையாட்டின் பயன்கள் அதிகம் என உணர்ந்து, இந்த மனநல பிரிவின் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர் காயத்ரி கல்பனாவிடம் இவ்வுதவியைக் கோரியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட கல்பனா, மனநல பிரிவில் உள்ள ஏறக்குறைய 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த கேரம் போர்ட்டுகளை வழங்கி, அவர்களின் மனநல சிகிச்சை முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார்.
மலாக்கா ம.இ.கா மகளிர் பிரிவின் துணைத்தலைவரின் இந்த உதவி, மனநல பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பெரும் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.