
மலாக்கா, அக்டோபர்-12,
மலாக்கா ‘Baba Nyonya’ சமூகத்துக்கு கிடைத்துள்ள ஒரு முக்கிய அங்கீகாரமாக, அவர்கள் தங்களது இன அடையாளத்தை பிறப்புச் சான்றிதழில் ‘Baba Nyonya’ என்றே பதிவுச் செய்யலாம்.
அக்டோபர் 1 முதல் இவ்வாண்டு கடைசி வரை மலாக்கா Baba Nyonya-கள் அவ்வாறு செய்யலாம்; வரும் ஜனவரி முதல் மற்ற மாநிலங்களிலும் உள்ள அச்சமூகத்திற்கு இது விரிவுப்படுத்தப்படும்.
மலேசிய Baba Nyonya சங்கத்தின் தலைவர் டத்தோ Ronald Gan அதனைத் தெரிவித்தார்.
இது, அரசாங்கம் வழங்கிய மிகச் சிறந்த மூன் கேக் திருவிழா மற்றும் தீபாவளி பரிசு என அவர் வருணித்தார்.
இந்த அனுமதியானது, Baba Nyonya சமூகத்தின் மரபு, அடையாளம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் சொன்னார்.
விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் அச்சங்கத்தின் ஒப்புதலை பெற வேண்டியிருக்கும்; அதற்குப் பிறகே JPN எனப்படும் தேசியப் பதிவிலாகா வாயிலாக பதிவு செய்யலாம்.
1957-க்கு பிறகு Baba Nyonya இனத்தினர் “Cina” என்று மட்டுமே வகைப்படுத்தப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில் இப்புதிய ஏற்பாடு, அந்த சமூகத்தின் தனித்துவமான அடையாளத்தைக் காப்பாற்றும் என Ronald நம்பிக்கை தெரிவித்தார்.