
கோலாலம்பூர், மார்ச் 19- மலாயா பல்கலைக் கழகத்தின் இந்து சங்கம் தர்மத்தின் வழி 7.0 என்ற குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. உயர்க்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் IPTA, IPTS, IPG, Polytechnic, Matriculation மாணவர்களுடன் பொதுமக்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.
உங்களின் சிந்தனைகளைக் குறும்படமாக மாற்றுவதற்கான ஒரு அறிய வாய்ப்பாக அமையும் இந்த போட்டிக்கான பதிவு மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ஆம்தேதிவரை நடைபெறும். இந்த போட்டியின் மூலம் கதைக்களம் அமைத்தல், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற திரைப்படத் துறையின் முக்கியமான கோணங்களை அறிந்து கொள்ளவும், படைப்புத் திறனை மேலும் கூர்மையாக்கவும் ஒரு சிறந்த தளமாக இப்போட்டி அமைகின்றது.
இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் உங்கள் படைப்பை பெரிய அளவில் வெளிப்படுத்தி, தொழில்துறையினருடன் இணைப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும், வெற்றி பெறும் படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகளும் அங்கீகாரமும் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் தங்கள் திறமையை உலகிற்கு காட்டி, கனவை நனவாக்க இப்போதே பதிவு செய்து கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம்
தொடர்புக்கு,
Sweetha Munusamy (010-8212197)
Kesavartini Kalaiselvan (017-8736498)
Dharshini Chandran (014-6038242)