
பூச்சோங், ஜூலை-21- மலாயாப் பல்கலைக் கழக 2005/2006 கல்வியாண்டு மாணவர்களின் 20-ஆம் ஆண்டு reunion ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் பூச்சோங்கில் நடைபெற்றது.
இரண்டு தசாப்த கால பகிரப்பட்ட வரலாற்றையும், முன்னாள் மாணவர்களிடையே நீடித்த பிணைப்புகளையும் கொண்டாடுவதற்குமான ஒரு மாலைப் பொழுதாக அந்நிகழ்வு அமைந்தது.
இம்முறை நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றது ஊக்கமளிக்கும் வகையிலிருந்ததாக, ஏற்பாட்டாளரும் முன்னாள் மாணவருமான முகுந்தன் பொன்னையா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் பழைய நண்பர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு குறித்து முன்னாள் மாணவர்களில் சிலர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
சுமார் 70 பேர் இதில் பங்கேற்று அளவளாவி பழைய நினைவுகளை அசைப்போட்டனர் தங்களின் நட்பை பாராட்டினர்.