Latestமலேசியா

மலேசியக் கடன் RM1.3 டிரில்லியன், ஆனால் விகிதாச்சாரத்தில் முன்னேற்றம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மலேசியாவின் கடன் இவ்வாண்டின் முதல் அரையாண்டில் RM56 பில்லியன் உயர்ந்து, ஜூன் இறுதியில் RM1.304 டிரில்லியன எட்டியுள்ளது.

2024 இறுதியில் இது RM1.248 டிரில்லியனாக இருந்தது.

இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் அதனைத் தெரிவித்தார்.

இந்த கடன் உயர்வு, வளர்ச்சி செலவுகள் மற்றும் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க அவசியமானது என அவர் விளக்கினார்.

ஆனால், கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Debt-to-GDP ratio) 64.6% இலிருந்து 63.9% ஆக குறைந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

அரசின் மொத்த கடன் பாக்கி RM384.6 பில்லியனாகும்; அதில் RM238.8 பில்லியன் உத்தரவாதக் கடன் என்றார் அவர்.

2022-ல் RM99.4 பில்லியனாக இருந்த புதியக் கடன்களை 2024-ல் RM76.8 பில்லியனாக அரசாங்கம் குறைத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், SST விரிவாக்கம், எரிபொருள் மானிய சீரமைப்பு, மற்றும் அரசு செலவுகள் சீரமைப்புகளை உள்ளிடக்கி இவ்வாண்டு நிதி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், குறைந்தபட்ச ஊதியம் RM1,500-லிருந்து RM1,700-ராக உயர்த்தப்படுகிறது; முன்னேற்றமான ஊதியக் கொள்கைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடன்களைக் குறைப்பதில், இவை மேலும் உதவுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!