மலேசியாவில் குறைந்து வரும் Influenza நோய் தொற்று- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், அக்டோபர் 31 –
மலேசியாவில் Influenza நோய் தொற்று மற்றும் கடுமையான சுவாச பாதிப்பு (SARI) சம்பவங்கள் இம்மாதத்திலிருந்து குறைந்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு (KKM) தெரிவித்துள்ளது.
‘Minggu Epidemiologi’ எனப்படும் 43 வது நோய்தொற்று கண்காணிப்பு வாரமான அக்டோபர் 19 முதல் 25 ஆம் தேதி வரை, ‘Influenza’ சம்பந்தப்பட்ட ஆலோசனை விகிதம் 9.68 சதவீதத்திலிருந்து 8.18 சதவீதமாக குறைந்தது. அதேபோல், சுவாச பாதிப்பு நோயாளி சேர்க்கை விகிதமும் 10.45 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், இரண்டு வாரங்களுக்கு முன் 216 ஆக இருந்த நோய் தொற்றின் எண்ணிக்கை தற்போது 30 ஆக மட்டுமே உள்ளதெனவும், அது 80 சதவீதத்திற்கும் அதிகமான குறைவைக் குறிக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்வழி நாடு Influenza நோய் தொற்றிலிருந்து மெதுவாக மீண்டு வருவதைக் காண முடிகின்றது.
இந்நிலையில் சுகாதார அமைச்சு, பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது, ஏனெனில் முந்தைய காலத்தில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



