
கோத்தா கினாபாலு, நவம்பர்-9,
மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே மடானி அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே அமெரிக்கா – சீனா போன்ற வல்லரசுகளுடன் கொண்ட நல்லுறவுகளை யாரும் குறைக் கூறினாலும் தமக்குக் கவலையில்லை என்றார் அவர்.
மலேசியா இறையாண்மைமிக்க நாடு; எனவே பிரதமராக தாம் எடுக்கும் எந்தவொரு முடிவும், மக்கள் நலனையும் பொருளாளாரத்தையும் பாதுகாக்கும் வகையிலேயே இருக்கும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
அரசியல் சச்சரவுகளால் நாம் நிறைய பின்தங்கியுள்ளோம்; அதை சரிசெய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்வதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
“பொருளாதார வலிமையை வலுப்படுத்த வேண்டும்; இதன் மூலம் கொள்கை வகுப்பிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்”
அந்நோக்கத்தை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என அன்வார் சொன்னார்.
கோத்தா கினாபாலுவில் சபா தொழில்துறை சங்கங்களுடன் நடைபெற்ற கலந்ரையாடலில் பேசிய போது அவர் அவ்வாறு கூறினார்.



