
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – பாலஸ்தீனிய வேளாண்மை மற்றும் உணவுப் பொருட்களில் சிலவற்றுக்கு வரியை விலக்க மலேசியா உடன்பட்டுள்ளது என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில் அமைச்சர் தெங்க்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் அப்துல் அசீஸ் (Tengku Datuk Seri Zafrul Abdul Aziz) தெரிவித்தார்.
பாலஸ்தீன நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எழச்செய்யவும், சமூக பொருளாதார மீட்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும் மலேசியா உறுதியாக நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புரிந்துணர்வு உடன்பாட்டின் (MoU) மூலம் வாணிபம், முதலீடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கவும், தனியார் துறைகளுக்கிடையேயான கூட்டாண்மையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில்துறை மண்டலங்கள், SMEs வலுப்படுத்தல், ஹலால் தொழில், சுற்றுலா, ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் கூட்டாண்மை விரிவாக்கம் ஆகிய துறைகளில் பாலஸ்தீனத்தின் பொருளாதார மீட்சிக்கும் மலேசியா தொடர்ந்தும் பங்களிப்புச் செய்யும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஸ்தீனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழம் போன்ற வேளாண்மைப் பொருட்கள் முதன்மை இடம் பெற்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.