பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8 – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்களின் மகத்தான துணிவு மிக்க வீரத்தினையும் தன்னலமற்ற சேவைகளையும் நல்லாசிகளுடன் தொடர வேண்டும் எனும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மலேசிய இந்திய தீயணைப்புக் குழுவினர் ஒன்றிணைந்து சிறப்பு வழிபாட்டினை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த ஜூலை 6ஆம் திகதி, கிள்ளான் பள்ளத்தாக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளின் தலைமையில், இவ்வாண்டிற்கான வழிபாட்டில் தீயணைப்பு வீரர்களுடன் சுமார் 150 பேர் கலந்துக் கொண்டனர்.
மலேசியாவில் பணிபுரியும் அனைத்து இந்திய தீயணைப்பு வீரர்களையும் ஒன்றிணைக்கும் இவ்வழிபாட்டில், இவ்வாண்டு 25 வருடமாக அசாதாரண பங்களிப்பை வழங்கி வருகின்ற வீரர்களுக்கும், பணி ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் பொன்னாடை போற்றி சிறப்புச் செய்யப்பட்டுள்ளது.
நம்முடனே கலந்து நம் இடர்களைக் களைபவர்களான தீயணையப்புத்துறை வீரர்களின் நலனுக்காக திருமுருகன் ஆலயமும் இணைந்து ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதை அவ்வாலயத்தின் தலைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு தீயணைப்பு துறையின் துணைத் தலைவர் Pramnath Hariskisna தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைப்பெறவுள்ள இந்த வழிபாடு அடுத்து தீயணைப்புத் துறையின் இதர பிரிவினரால் கொண்டாடப்படும்.