Latestமலேசியா

மலேசிய செயலாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் கழகத்தின் தலைவராக டத்தோ அக்பர் மொய்துன்னி தேர்வு

கோலாலம்பூர் – ஜூலை 15 – MAICSA எனப்படும் மலேசிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கழகத்தின் 65வது ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 2025–2026 ஆண்டுக்கான தலைவராக டத்தோ அக்பர் பின் மொய்துன்னி ( Akbar bin Moidunny ) மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.

இதர நிர்வாகிகளில் துணைத் தலைவராக திருமதி தீபக் கவுர் (Ms. Dipak Kaur) , துணைத் தலைவராக டாக்டர் நந்திதா சவுத்ரி ( DR . Nandita Choudhury) கௌரவச் செயலாளராக இணைப் பேராசிரியிர் நுர்பிஜான் அபு பாக்கார் (Assoc. Prof. Noorbijan binti Abu Bakar) கௌரவ பொருளாளராக Ms. லீ மீ ருயோங் ( Ms. Lee Mi Ryoung ) மற்றும் உடனடி கடந்த கால தலைவர் சைமன் யோ (Mr. Simon Yeoh) ஆகியோர் அடங்குவர்.

38 ஆண்டுகளுக்கும் மேலான நிறுவனத் தலைமை அனுபவத்தைக் கொண்ட டத்தோ அக்பர், எதிர்கால நிர்வாகத் தலைவர்களை உருவாக்குவது , முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது மற்றும் நிறுவன நிர்வாகத்தில் தேசிய அதிகாரமாக நிலைநிறுத்துவது ஆகியவற்றில் MAICSA முக்கிய கவனம் செலுத்தும் என உறுதியளித்தார்.

மலேசியாவில் நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க நாங்கள் இங்கு இருக்கிறோம் என்று டத்தோ அக்பர் மேலும் கூறினார். நாடு தழுவிய நிர்வாக சிறப்பை முன்னேற்றுவதில் உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகள் இணைவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே தலைமைத்துவ தொடர்ச்சி தற்போதைய திசையில் வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் இலக்கவியல் மாற்றம் , கொள்கை மற்றும் தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகளை விரைவுபடுத்த உதவும் என்றும் MAICSAவின் தலைமை நிர்வாக அதிகாரி Mr. Justin J Anthony கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!