Latestமலேசியா

மலேசிய வருகையின் போது IShowSpeed தொண்டையில் Musang King டுரியான் சுளை சிக்கிக் கொண்டதால் பரபரப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -18, தென்கிழக்காசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியா வந்த அனைத்துலக சமூக ஊடகப் பிரபலம் IShowSpeed, இரசிகர்கள் முன்னிலையில் ஒரு Musang King டுரியான் பழத்தின் சுளையை கொட்டையோடு விழுங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேரலைப் போய்க்கொண்டிருக்க, பெரும் ஆரவாரத்தோடு அண்ணாந்து பார்த்தபடி டுரியான் சுளையை அவர் எடுத்து வாயில் போட்டார்.

அடுத்த கணமே கொட்டை தொண்டையில் சிக்கி அவர் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், எல்லா விஷயத்திலும் மிதமிஞ்சிய உற்சாகம் சரிபடாது; அதுவும் எங்கள் நாட்டு டுரியான் பழத்தை ருசிப்பதற்கென்றே தனி வழியுண்டு என அவரை நினைவுறுத்தினர்.

டுரியான் பழம் தவிர்த்து, மலேசியர்களிடையே பிரபலமான நொறுக்குத் தீனியான Super Ring-கையும் ஒரு கைப் பார்க்க அவர் தவறவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த You Tube பிரபலமான IShowSpeed, தனது ‘ஆர்வக்கோளாறு’ உடல்மொழியாலும் பேச்சாலும் சேட்டைகளாலும் உலகம் முழுவதும் பெரும் இரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!