
டாமான்சாரா, மார்ச்-24 – மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் தொடர்பில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடவர் கைதாகியுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் சந்தேக நபர் கைதானார்; கொலை மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஷாருல் நிசாம் ஜாஃபார் உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் சட்டம், தொடர்பு – மற்றும் பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.
தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் குறித்து தான் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஃபிர்டாவுஸ் வோங் வெள்ளிக்கிழமை மாலை போலீஸில் புகார் செய்திருந்தார்.
Facebook messenger வாயிலாக அனாமதேய கணக்கிலிருந்து அந்த கொலை மிரட்டல் வந்ததாக அவர் தனது புகாரில் கூறினார்.