Latestமலேசியா

மாணவரின் காற்சட்டையை பிடித்து கீழே இழுத்த 3 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், நவ 21 – கடந்த வாரம் 13 வயது மாணவர் ஒருவரின் கால்சட்டையை பிடித்து கீழே இழுத்த குற்றத்திற்காக பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மூன்று 16 வயது மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அம்மூவரும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

பகடி வதைக்கு எதிரான விதியின் கீழ் மாணவனை துன்புறுத்தியது , தொந்தரவு செய்தது மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அம்மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது .

நீதிபதி நூருல் இசலினா ராஜாய் ( Nurul Izalina Rajaai ) முன்னிலையில் அந்த மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

நவம்பர் மாதம 14 ஆம்தேதி காலை 8.30 மணியளவில் பாரிட்டில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் அந்த மாணவனை தள்ளிவிட்டு அவனது காற்சட்டையை அம்மூவரும் இழுத்தாக கூறப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.

இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 500 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!