
கோலாலம்பூர், ஏப் 15 – டெங்கிலில் உள்ள தனது வளாகத்தில் குளக்ஸ் கிளான் ( Ku Klux Klan ) ( KKK) அங்கிகளை அணிந்திருந்த மாணவர்கள் குழுவை இன்று (UiTM) எனப்படும் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் தற்காத்ததோடு , சட்ட சிக்கல்கள் குறித்த பணியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாகக் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சமய ரீதியாக புண்படுத்தும் செயலாகக் கருதப்படவில்லை என்றும் UiTM மாணவர்களின் விளக்கக்காட்சி பல நாடுகளில் காணப்படும் ஒரு நடைமுறையான தோல் நிறத்தின் அடிப்படையில் பாகுபாட்டை மையமாகக் கொண்டிருந்தது.
தலைப்பை நன்கு புரிந்துகொள்ளவும், பாராட்டவும் உதவும் வகையில் உடைகள் காட்சியின் ஒரு பகுதியாக இருந்தன என்று UiTM வெளியிட்ட அறிக்கையில் கூறியது. KKK உடையில் மாணவர்கள் சிலுவைகளை ஏந்தியிருப்பதை சித்தரிக்கும் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து UiTM இவ்வாறு பதிலளித்தது.
பல்கலைக்கழகம் எப்போதும் கல்வித்துறையில் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் கலாச்சார உணர்திறன் போன்ற மதிப்புகளை வலியுறுத்தி வருவதாகவும், பொறுப்பான மற்றும் நெறிமுறை கல்விக்கு உறுதியுடன் இருப்பதாகவும் UiTM தெரிவித்தது.
இந்த விளக்கம் சூழ்நிலையை தெளிவுபடுத்தும் என்றும், மேற்கொள்ளப்பட்ட பணியின் தவறான விளக்கத்தைத் தடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
கல்வி கண்ணோட்டத்தின் மூலம் சம்பவத்தை மதிப்பிடவும், சூழ்நிலையின் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் பொதுமக்களை அந்த பல்கலைக்கழகம் வலியுறுத்தியது.
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய கே.கே.கே., இனவெறி, வெள்ளையர்களின் தேசியவாதம் மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை ஊக்குவிப்பதற்காக மிகவும் பிரபலமானது.