
கோத்தா கினபாலு, செப் -26,
மானிய விலை டீசல், பெட்ரோல், சிகரெட்டுகள் மற்றும் வரி விதிக்கப்படாத மதுபானங்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உட்பட நால்வரை , நேற்று மெனும்போக்,
( Menumbok, ) லஹாட் டத்து ( Lahat Datu ) மற்றும் செம்போர்னாவில்
( Semporna) வில் சபா 4 ஆவது வட்டார Marin போலீஸ் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் கைது செய்தனர். மாலை மணி 6.05க்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், Tungku பகுதியில் பகுதியில் ஆறு டிரம் டீசல் எண்ணெயை ஏற்றிச் சென்ற டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்துடன் உள்ளூர்வாசி ஒருவர் லஹாட் டத்துவில் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின் கெலாம்-கெலாம் ( Gelam – Gelam ) செம்போர்னா கடல் பகுதியில் , அண்டை நாட்டிற்கு 104 டிரம் பெட்ரோல் கடத்த முயன்ற ஒரு வெளிநாட்டு நபரை மெரின் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செம்போர்னாவில் , கம்போங் லுமாங்காஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான பம்ப் படகை வெற்றிகரமாகக் கண்டறிந்த பின்னர், பல்வேறு பிராண்டுகளைக் கொண்ட 42,000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே மெனும்போக்கில், ஒரு வாகனத்தைப் பயன்படுத்தி 100 அட்டைப்பெட்டிகளில் வரி விதிக்கப்படாத பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்களை கடத்த முயன்றதைக் கண்டறிந்த பின்னர், உள்ளூர்வாசி ஒருவரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 326,664 ரிங்கிடிற்கு மேலாக இருக்கும் என சபா 4ஆவது வட்டாரத்தின் மெரின் போலீஸ் கமாண்டர் உதவி ஆணையர் நஸ்ரி இப்ராஹிம் தெரிவித்தார்.