
புத்ராஜெயா, ஜனவரி 30 – நாடு முழுவதும் ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய, கல்வி அமைச்சு 20,000 Pegawai Perkhidmatan Pendidikan அதாவது DG9 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 2 முதல் மார்ச் 20 வரை திறந்திருக்கும் என கல்வி துறை தலைமை இயக்குநர் Dr Mohd Azam Ahmad தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 23 ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 14 வரை, கல்வி சேவை ஆணையத்துடன் இணைந்து நடத்தப்படும்.
இந்த நியமனம் 2026–2035 தேசிய கல்வித் திட்டம் செயல்படுத்தும் முன்னேற்பாடாகவும்,
அடுத்த ஆண்டில் ஆறு வயது குழந்தைகள் தன்னார்வமாக ஆண்டு ஒன்று சேரும் திட்டத்தை ஆதரிக்கும் வண்ணமாகவும் அமைந்துள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்,
கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொழில்முறை பயிற்சி பெற்ற பின்னரே பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



