
ஜாசின், மார்ச் 27-ஜாசினில் Jalan Gapam – Bemban சாலைக்கு அருகே
நேற்று வங்கி ஊழியரான பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற SUV வாகனம் மின்விளக்குக் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தபோது, அவர் ஒரு திகிலூட்டும் தருணத்தை எதிர்கொண்டார்.
மாலை மணி சுமார் 6.30 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 51 வயதான அந்த பெண் அந்த வாகனத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினார்.
சாலையின் நடுவே உள்ள மின்விளக்குக் கம்பத்தில் மோதும் முன், அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Lee Robert தெரிவித்தார்.
தீயினால் அந்த வாகனம் முழுமையாக எரிந்து சாம்பலானது.
இதனிடையே நேற்று மதியம் மணி 12.02 அளவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் , பத்து பெரெண்டமில் உள்ள தாமான் மெர்டேகா ஜெயா உணவுக் மையத்திற்கு எதிரே, ஜாலான் எம்ஜே 31 சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள் ஏற்றப்பட்ட ஒரு லோரியும் தீப்பிடித்தது.
எனினும் அந்த லோரி ஓட்டுநரான 32 வயதுடைய ஆடவர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பினார்.



