
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின்-ஹெய்லிங் (e-hailing) சேவைகள் குறித்த விவாதங்களை நடத்த மலேசியா தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையே விவாதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று வெளிநாட்டு வாகனங்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், சிங்கப்பூரைச் சார்ந்தவர்களால் இயக்கப்பட்ட நான்கு தனியார் வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகள் தொடர்பான சோதனையில், சிங்கப்பூர் சாரதிகள் இயக்கிய ஐந்து பேருந்துகளை JPJ பறிமுதல் செய்ததையும் லோக் தெரிவித்தார்.
இந்த வாகனங்களுக்கு செல்லுபடியாகும் உரிமம் இல்லை என்றும் அவை பொது சேவை வாகனங்களாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றதென்றும் அறியப்படுகின்றது.