Latest

மீண்டும் புத்துயிர் பெற்ற பினாங்கு Sri Bayu & Quinton வீட்டு திட்டங்கள் – Mah Sing குழுவை நியமித்த பினாங்கு அரசு

ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 4 – பினாங்கு பாலிக் புலாவ் பகுதியில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த Sri Bayu மற்றும் Quinton குறைந்த விலை வீட்டு திட்டங்களை முடிக்க, பினாங்கு மாநில அரசு Mah Sing குழுவை நியமித்துள்ளது.

மொத்தம் 625 வீடுகள் கொண்ட இந்த இரண்டு திட்டங்களின் கட்டுமானங்கள் 70 முதல் 80 விழுக்காடு வரை நிறைவடைந்த நிலையில், முதன்மை மேம்பாட்டாளரின் நிதி சிக்கல் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இத்திட்டங்களை முடிப்பதற்கு நிதி ஆதரவாளராக Mah Sing பெர்ஹாட் செயல்படும் என்றும் திட்ட மேலாண்மைக்காக Baker Tilly Insolvency நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow அறிவித்துள்ளார்.

Mah Sing குழு தலைமை செயல் அதிகாரி Datuk Voon Tin Yow, இந்த இரண்டு திட்டங்களையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, பணிகள் முடிவடைய சில காலம் தேவைப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!